புதிய வாழ்க்கைக்குள் போக இருக்கிறோம்; திருமணத்தை அறிவித்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் விரைவில் தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல்களுக்குப் பிறகு, நடிகை தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) விரைவில் தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல்களுக்குப் பிறகு, நடிகை தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தியுள்ளார். காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதமுக்கும் அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. அந்தவகையில் தற்போது காஜல் அகர்வாலுக்கும் கௌதமுக்கும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது திருமண அறிவிப்பை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார் காஜல். அதில், அக்டோபர் 30 ஆம் தேதியில் கௌதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. மும்பையில் எங்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்கிறது. இந்த பொது முடக்கம் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் தந்துள்ளது. அதேசமயம் அந்த வாழ்க்கை ஒரு விதி பதட்டத்தையும் தருகிறது. உங்களின் அன்பு மற்றும் ஆசி நன்றி. புதிய வாழ்க்கைக்கு செல்லும் எங்களுக்கு உங்களின் வாழ்த்து தேவை. எப்போதும் போல் தொடர்ந்து படங்களின் மூலமாக ரசிகர்களை மகிழ்விப்பேன் நன்றி.
இவ்வாறு காஜல் தெரிவித்துள்ளார்.
பணி முன்னணியில், ஷங்கர் இயக்கும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ALSO READ | இயக்குனரான பிரபல நடன மாஸ்டர்..! ஹீரோ யார்!! முழு விவரம் உள்ளே!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR