புதுடெல்லி: தென்னிந்தியாவின் பிரபல நடிகை காஜல் அகர்வால் தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகின்றன. கடந்த ஆண்டு முதல், காஜல் அகர்வாலின் திருமணம் குறித்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகின. ஆனால் இப்போது காஜல் உண்மையில் திருமணம் செய்து கொள்ள தயாராகிவிட்டார் என்ற செய்தி வருகிறது. காஜலுக்கும், கெளதம் என்ற தொழிலதிபருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்...
Bollywoodlife.com வெளியான செய்தியின்படி, காஜல் அகர்வாலின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சீனிவாஸ் பெலம்கொண்டா காஜலின் ரகசிய நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார். இருப்பினும், நிச்சயதார்த்தம் குறித்து காஜல் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் தினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. காஜல் தனது சமூக ஊடக பதிவுகள் மூலம் மட்டுமே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. இப்போது காஜலின் ரசிகர்கள் இந்த நற்செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, காஜல் அகர்வால் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார். லட்சுமி மஞ்சுவின் தொலைகாட்சி நிகழ்ச்சியான 'ஃபீட் அப் வித் தி ஸ்டார்ஸ் தெலுங்கு' நிகழ்ச்சியில், காஜல் 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தனது ஐடல் மேன் பற்றிப் பேசிய காஜல், 'இதுபோன்ற பல எதிர்பார்ப்புகள் உள்ளன, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நபர் அக்கறையுள்ள மற்றும் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்று காஜல் தெரிவித்திருந்தார்.
Read Also | நடிகர் சிவகார்த்திகேயனை எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிடுவதற்கான காரணம் தெரியுமா?