தமிழ் திரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து வரும் 6.1.2624 சனிக்கிழமையன்று சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைஞர் நூற்றாண்டு விழா:


கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை மு.பெ. சாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்றழைக்கப்படும் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மலையாள பட உலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் இந்தி திரை உலகிலிருந்து முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.


மேலும் படிக்க | அமலா பால் அம்மாவாக போறாங்க..ரசிகர்கள் மகிழ்ச்சி!


ஆறுமணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கலைஞர் வசனம் தீட்டிய, பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள் , கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மேடையில் மக்களுக்கு காட்டப்பட உள்ளன.


இந்த விழாவிற்காக டெல்லியில் இருந்து ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான ஷோக்கள் பரவசப்படுத்த உள்ளன. இந்த விழவிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20 க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ரிகர்சல் பார்த்து வருகின்றனர். இந்த பிரம்மாண்டமான விழாவிற்காக மிகப்பெரிய மேடை' 20 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்க நாற்காலிகள், 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் என வேலைகள் மும்முரமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில் , பெப்சி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | தமிழகத்தில் சரமாரியாக சறுக்கிய சலார்! இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவுதானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ