கல்கி 2898 ஏடி படத்தில் எதிர்பார்க்காத கேமியாே கதாப்பாத்திரங்கள்! இத்தனை பேரா..
Kalki 2898 AD Movie Cameo Actors : கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இதில் பல தென்னிந்திய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Kalki 2898 AD Movie Cameo Actors : தென்னிந்திய நடிகர்களுள் டாப் நடிகராக விளங்கும் பிரபாஸ், கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நாக் அஷ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சில பிரபல நடிகர்களும் கேமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா? (Spoiler Alert: நீங்கள் படத்தை திரையரங்கிற்கு சென்று, அந்த நடிகர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை தவிர்க்கவும்.)
கல்கி 2898 ஏடி :
கல்கி 2989 ஏடி திரைப்படத்தை, நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இப்படத்தின் வேலைகள் நடைப்பெற்று வந்தன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தீபிகா படுகோன், திஷா பதானி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
மகாபாரத போர் மற்றும் கல்கி அவதாரத்தை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று. சயின்ஸ்-ஃபிக்ஷன் மற்றும் புராணக்கதையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கேமியோ கதாப்பாத்திரங்கள்:
சமீபத்தில் வெளியாகி வரும் படங்கள் பலவற்றில், முன்னணி நடிகர்களே ஹீரோக்களாக நடித்திருந்தாலும், அதில் வேறு சில நடிகர்களையும் கேமியோ கதாப்பாத்திரங்களாக நடிக்க வைக்கின்றனர். அந்த வகையில், கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் பல்வேறு எதிர்பார்க்காத நடிகர்களை இற்க்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
எந்தெந்த நடிகர்கள்?
துல்கர் சல்மான்:
மலையாள நடிகர் துல்கர் சல்மான் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர், சில நிமிடங்கள் மட்டும் தோன்றும் வகையில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மிருணாள் தாகூர்:
பாலிவுட் கதாநாயகி மிருணாள் தாகூர், கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் வருகிறார். சீதா ராமம் படம் மூலம் பலரை கவர்ந்த இவர், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரது கதாப்பாத்திரத்தை நாக் அஷ்வின் சர்ப்ரைஸாக வைத்திருந்தார் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கல்கி படத்தைப் பார்க்க போறீங்களா? அப்போ இத முதல்ல படிங்க
ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா:
தெலுங்கு திரையுலகின் வெளியில் சொல்லப்படாத காதலர்கள் என்று ராஷ்மிகாவையும் விஜய் தேவரகொண்டாவை குறிப்பிடுகின்றனர். இவர்கள் இருவரும், தங்களின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ஒன்றாக படங்களில் நடித்தனர். காதல் கிசுகிசுவிற்கு பிறகு ஒன்றாக நடிப்பதில்லை. இந்த நிலையில், இவர்களின் கதாப்பாத்திரம் கல்கி படத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன்:
கமல்ஹாசன், கல்கி படத்தில் நடிக்கிறார் என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். இந்த படத்தில் அவரது பெயர் யாஷ்கின் (கலி) எனக்கூறப்படுகிறது. இவரது காட்சிகள் படத்தில் வெறும் 10 நிமிடங்களுக்குதான் வருகிறதாம். ஆனால், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாதியில் இவரது கதாப்பாத்திரத்திற்கான காட்சிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சனம்:
கல்கி படத்தின் முதல் பாதி கொஞ்சம் மந்தமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் வேகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸின் கதாப்பாத்திரம் பாகுபலி படத்திற்கு பிறகு வலிமையாக காண்பிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இது நல்ல வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கலக்கியதா கல்கி? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ