Kalki 2898 AD Movie Second Part: பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்கி திரைப்படம்:
கல்கி 2898 ஏடி திரைப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியிருந்தார். நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு ஜாலியாக நடித்திருந்த படம் இது. இவருடன் படம் முழுவதும் கூடவே பயணிக்கும் ‘புஜ்ஜி’ என்ற காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருந்தார். மேலும் இதில் சிறப்பு என்னவென்றால் இதில் பான் இந்திய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். புராணத்தில் கதையான மகாபாரத கதையை தழுவி, அதே போன்ற போர் டிஸ்டோப்பியன் காலக்கட்டத்தில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டிருந்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது. கிராஃபிக்ஸ் காட்சிகள், கதையமைப்பு, திரைக்கதை, வசனங்கள், இயக்கம், பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் மக்களை பெரிதாக ஈர்த்திருக்கிறது. இப்படத்திற்கு சந்தாேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Nepotism In The GOAT Movie : நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!


1000 கோடி வசூல் சாதனை:
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும் இந்த பிராந்தியத்தில் பாகுபலி 2 படத்திற்கு அடுத்து இந்த சாதனையைச் செய்துள்ளது. கல்கி 2898 AD யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ஒரு உலகத் தரத்தில், மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன், மாயாஜால காட்சிகளும் முற்றிலும் புதிய களத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது. ஹீரோ பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் அனைவரையும் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.


கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம்:
இந்நிலையில் தற்போது கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் முதல் பாகத்தில் ஒரு சில நிமிடங்களே வந்த கமல்ஹாசன் கதாபாத்திரம் அடுத்த பாகத்தில் அதிக அளவு இருக்கும் என கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க தொழில்நுட்ப பணிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்து முடிவடைய சுமார் மூன்று வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் 2028 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | IIFA Awards 2024: அபுதாபியில் 3 நாள் கொண்டாட்டம்... இணை-தொகுப்பாளராக இணையும் விக்கி கௌஷல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ