நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!

Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2024, 05:57 PM IST
  • தி கோட் படத்தில் நெப்போடிசம்!
  • ரிப்ளை கொடுத்த வெங்கட் பிரபு..
  • வாயடைக்க வைத்த நெட்டிசன்..
நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!  title=

Nepotism In The GOAT Movie : தமிழ் திரையுலகில், தற்போது கவனம் ஈர்க்கும் இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர், விஜய்யை வைத்து தி கோட் (The Greatest Of All Time) படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம், அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, இப்படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வெங்கட் பிரபு, படம் குறித்த பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார். இப்போது, அவருக்கும் ஒரு நெட்டிசனுக்குமான சண்டைதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

என்ன பிரச்சனை? 

ஒரு நெட்டிசன், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “எஸ்.ஏ.சி பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கல்பாத்தி அகோரம் பொண்ணு..இணைந்து மிரட்டும் கோட்” என்று குறிப்பிட்டிருந்தார். 

விஜய், பிரசாந்த், வெங்கட் பிரபு, பிரேம் ஜி, யுகேந்திரன், கல்பாத்தி அர்ச்சனா என அனைவரையும் நெப்போ கிட்ஸ் (பிரபலங்களின் வாரிசுகள்) என்று கூறியிருக்கிறார் அந்த நெட்டிசன். இதற்கு வெங்கட் பிரபுவும் ஒரு பதிலடியை கொடுத்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் பதில்..

இயக்குநர் வெங்கட் பிரபு, அந்த நெட்டிசனின் பதிவுக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதில், “தேங்க்ஸ் ப்ரோ!! உங்க அப்பா பேரு சொல்லுங்க..அவருக்கும் சேர்த்து Thank பண்ணிட்ரேன்..” என்று கூறினார். 

அதற்கு அந்த ரசிகர், “தேவப்படாது ப்ரோ..நான் நெப்போட்டிசம் ப்ராடெகட்ட இல்ல..” என்று ரிப்ளை செய்தார். இதையடுத்து வெங்கட் பிரபு பதிலுக்கு எதுவும் பேசவில்லை. இதுவும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தீயாக பரவிய ட்வீட்..

நடிகர் விஜய்யை வைத்து, இது போன்ற பதிவுகள் வைரலாவது எப்போதும் வழக்கம். இதற்கு வெங்கட் பிரபு பதில் தெரிவித்ததுதான், அந்த நெட்டிசனின் பதிவை வைரலாக்கியிருக்கிறது. செய்தி சேனல்களில் இருந்து-மீம் கிரியேட்டர்கள் வரை பலர் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | 50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..

ரசிகர்கள் கருத்து..

அந்த நெட்டிசன் கூறியது சரியான கருத்தா? அல்லது தவறானதா? என்ற விவாதமும் தற்போது இணையத்தில் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் தரக்குறைவாக அந்த நெட்டிசனை கலாய்த்தாலும், “அவர் கூறிய கருத்தில் தவறு ஒன்றும் இல்லையே..” என்று சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து ட்விட்டர் எக்ஸ் தளதம் அனல் பறக்கும் விவாதங்களால் கொழுந்து விட்டு எரிகிறது. 

கோட் பட அப்டேட்..

தி கோட் திரைப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய வெங்கட் பிரபு, இதுவும் மங்காத்தா படம் பாேல, காட்சிக்கு காட்சி பரபரப்பு பொறுந்தியதாக இருக்கும் என்றும், அடுத்து என்ன காட்சி என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், சிவாஜி படம் போல ‘தி கோட்’ படமும் முழுக்க முழுக்க எண்டர்டெயினராக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் டிரைலரிலேயே தான் வகை குறித்து காண்பித்து விட்டதாகவும், ஆனால் யாருமே அதை சரியாக கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார். இதனால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்துள்ளது. பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | தி கோட் டிரைலர்: சம்பவம் செய்த வெங்கட் பிரபு! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News