புதுடெல்லி:பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான கமல்ஹாசன் சமீபத்தில் ஷெர்ஷா என்ற திரைப்படத்தைப் பார்த்து சிலாகித்து, அந்தத் திரைப்படத்தின் விமர்சனத்தை தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டிருந்தார். தசாவதார நாயகனான கமலஹாசனின் விமர்சனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமலஹாசன் படத்தை ரசித்தது மட்டுமல்லாமல் இளைஞர்களின் திறமையையும் பாராட்டினார். கமல்ஹாசன் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்:



’எனது சிறுவயதிலிருந்தே ஒரு திரைப்பட ரசிகனாக இருந்திருக்கிறேன். ஒரு தேசபக்தரின் மகனாகவும் இருக்குக்ம் எனக்கு, சில சினிமாக்களில் இந்திய ராணுவம் சித்தரிக்கப்பட்ட விதத்தில் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டதுண்டு. ஷெர்ஷா திரைப்படம் அதிலிருந்து விதிவிலக்காக அமைந்துள்ளது. நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஷெர்ஷா, ஒரு கலைஞனாக என் நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்ளச் செய்கிறது’. 



சித்தார்த் மல்ஹோத்ராவின் ஷெர்ஷா - ஆகஸ்ட் 12, 2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ராணுவ வீரர் கேப்டன் விக்ரம் பாத்ரா-வின் (Captain Vikram Batra) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட போர் படம் ஷெர்ஷா.


ஷெர்ஷா திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, இது சற்று மவுசு குறைந்திருக்கும் பாலிவுட் நடிகர் சித்தார்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல்கள்லாக அமைந்து, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.


1999 ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த கார்கில் போரின் உண்மை நிகழ்வுகளைப் பற்றிய கதையை பின்னணியாக கொண்டது ஷெர்ஷா திரைப்படம். போரின் போது தன்னலமில்லாமல் இன்னுயிரை இழந்த இந்திய ராணுவ வீரரான கேப்டன் விக்ரம் பத்ராவின் கதையின் அடிப்படையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் தன்னை நிலைநிறுத்தும் படமாக ஷெர்ஷா இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.  


Also Read | தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம் 


ஷெர்ஷா கேப்டன் விக்ரம் பாத்ராவின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விஷ்ணு வரதன் (Vishnu Varadhan) இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.


இந்த திரைப்படத்தில் ஷிவ் பண்டிட், ராஜ் அர்ஜுன், பிரனாய் பச்சோரி, ஹிமான்ஷு அசோக் மல்ஹோத்ரா, நிகிடின் தீர், அனில் சரஞ்சீத், சாஹில் வைத், ஷதாஃப் ஃபிகர் மற்றும் பவன் சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் காஷ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஷெர்ஷா. 


Also Read | கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR