திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சிறப்பு பொதுக்கூட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர்.அதேபோல் ஏராளமான நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள்  ராஜ்கமல் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான  உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.



கமல் - மணிரத்னம் இணையும் படத்தை உதயநிதி தயாரிக்கிறார். அதேபோல் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க  | இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா விஜய்யின் 'தளபதி 67' கதை?


மேலும் படிக்க | ரீ என்ட்ரிக்கு தயாரான ஆல்யா மானசா, புதிய சீரியல் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ