2008ஆம் ஆண்டு வெளியாகியிருந்த தசாவதாரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், இப்படத்தை ஒவ்வொரு முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவது திரைக்கதையும் கமலின் நடிப்பும்தான். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில விஷயங்களை ஆராயலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவின் ஹீரோக்களுள் கடின உழைப்புக்கு பெயர் போனவர், கமல் ஹாசன். தசாவதாரம் படத்தில் நடித்த போது, கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே உழைப்பு போட்டு, 10 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒற்றை ஆளாக செய்திருந்தார். புரியவில்லையா? 10 கதாப்பாத்திரங்களில் நடித்து பலரையும் அலர விட்டவர் என்ற பெருமைக்குரியவர் கமல். இந்த பத்து அவதாரங்களும் விஷ்ணுவின் 10 அவதாரங்களுடன் சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்டவை. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா?


விஷ்ணுவின் 10 அவதாரங்கள்-கமலின் 10 கதாப்பாத்திரங்கள்:


மத்ஸ்ய அவதாரம்-ரங்கராஜன் நம்பி:


விஷ்ணுவின் முதல் அவதாரமும் இதுதான், தசாவதாரம் படத்தில் முதன் முதலாக காட்டப்படும் அவதாரமும் இதுதான். மத்ஸ்ய அவதாரத்தில் விஷ்ணு,  மீன் போன்ற உருவம் எடுத்து அசுரர்களை வதம் செய்து தேவர்களை காப்பாற்றுவார். படத்தில், ரங்கராஜன் நம்பி கல்லோடு சேர்த்து கட்டப்பட்ட நிலையிலே இறந்து கிடப்பார். இது, படத்தின் க்ளைமேக்சில் காண்பிக்கப்படும். சுனாமி வருவதற்கு ரங்கராஜன் நம்பி இறந்த கல்லும் ஒரு காரணமாக இருக்கும். அந்த சுனாமியில்தான், இந்த படத்தில் வில்லனாக காண்பிக்கப்பட்ட க்ரிஸ்டியன் ஃப்லெட்சர் உயிர் துரப்பான். 


கூர்ம அவதாரம்-ஜார்ஜ் புஷ்:


விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம், கூர்ம அவதாரம். இதில், விஷ்ணு ஆமையாக மாறி தேவர்கள் அமிர்தத்தை கடைய உதவினார் என்பது புராண கதை. படத்தில், ஜார்ஜ் புஷ்ஷின் கதாப்பாத்திரம்தான் கொடிய கிருமியை கண்டுபிடிக்க காரணமாக இருக்கும். இதிலிருந்துதான் கதையே ஆரம்பிக்கும். சிறிய பாத்திரம், பெரிய தாக்கம்!


மேலும் படிக்க | Kazan Khan: பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்..! தென்னிந்திய திரையுலகை துரத்தும் சோகம்...


வராஹ அவதாரம்-கிருஷ்ணவேனி பாட்டி:


விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் என கூறப்படுவது, வராஹ அவதாரம். விஷ்ணு, இரன்யாக்‌ஷன் எனும் அரக்கனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உலகத்தையே மறைத்து வைத்தார் என கூறப்படுகிறது. அதுபோலவே, கிருஷ்ண வேணி பாட்டியும் தன் கையில் கிருமி கிடைத்தவுடன் அதை எடுத்துக்கொண்டு பீரோவிற்குள் போய் ஒளிந்து கொள்வார். 


நரசிம்ம அவதாரம்-ஷிங்கேன் நரஹாசி:


தனது பக்தன், பிரகல்லாதனை காப்பாற்றி அசுரனை வதம் செய்ய விஷ்னு எடுத்த அவதாரம், நரசிம்ம அவதாரம். இதில், தன் பக்தனுக்கு ஆபத்து என்றவுடன் பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடையும் நரசிம்மனைத்தான் ஜப்பான் கமலுடன் (ஷிங்கேன் நாஹாசி)  சம்பந்தப்படுத்தி கதை எழுதப்பட்டிருக்கிறது. மேலும், நரசிம்மன் தனது இரு கைகள் மூலமாகவே சூரனை வதம் செய்வார். படத்தில், பிறரை மார்ஷியலாட்ஸ் வித்தையின் மூலமாகவே வீழ்த்தும் வித்தையை கற்று வைத்திருப்பார், அந்த ஜப்பான் கமல். 


வாமன அவதாரம்-கலிஃபுல்லா கான்:


விஷ்ணுவின் வித்தியாசமான அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். ஒரு அரசனை அடக்க, உலகளந்த பெருமாளாக வாமன அவதாரத்தில் மாறினார், விஷ்ணு. இதை வைத்துதான் கலிஃபுல்லா கானின் கதாப்பாத்திரம் தசாவதாரம் படத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட உயரமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார், கமல். 


பரசுராம அவதாரம்-கிரிஸ்டியன் ஃப்லிட்சர்:


புராண கதைப்படி, விஷ்ணுவின் பரசுராம அவதாரம் ஷேய்த்ர வம்சத்தை சேர்ந்தவர்களின் 21 தலைமுறையினரை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இதை தசாவதாரம் படத்தில் இடம் பெற்றிள்ள ஃப்லெட்சர் கதாப்பாத்திரத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இருக்கும் 10 கமலின் கதாப்பாத்திரங்களிலேயே இவன் மட்டும்தான் வில்லன். 


 


ராம அவதாரம்-அவதார் சிங்:


‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் கொள்கையோடு வாழ்ந்த விஷ்ணுவின் அவதாரம், ராமர். இவர் கதையோடு பொருந்தி போவதுதான் அவதார் சிங்கின் கதாப்பாத்திரம், ராமரின் அவதாரம் எப்படி காதலை பறைசாற்றுகிறதோ, அதேபோல அவதார் சிங்கின் கதாப்பாத்திரமும் தன் மனைவியை மிகவும் நேசிப்பது போல அமையப்பெற்றிருக்கும். பாட முடியாது என தெரிந்தும் தன் மனைவிக்காக ஆப்ரேஷனுக்கு ஒத்துக்கொள்வார், அவதார் சிங். 


பலராம அவதாரம்-பல்ராம் நாயுடு:


கிருஷ்ணரின் சகோதரராக பார்க்கப்படும் பலராமரின் கதாப்பாத்திரம், ஒரு சில இதிகாசங்களில் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பெயர் காரணத்திற்காக தசாவதாரத்தில் வரும் பல்ராம் நாயுடு கதாப்பாத்திரம் அமையப்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 



கிருஷ்ண அவதாரம்-வின்செண்ட் பூவராகவன்:


விஷ்ணுவின்ன் 8ஆவது அவதாரமாக கூறப்படுவது, கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்திற்கும், தசாவதாரத்தில் இடம் பெற்றிருக்கும் பூவராகவன் கதாப்பாத்திரத்திற்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது. கிருஷ்ணரும் கருப்பு-பூவராகவனும் கருப்பு. கிருஷ்ணர், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதையேத்தான் பூவராகவனும் இப்படத்தில் செய்வார். திரெளபதியின் மானத்தை கிருஷ்ணர் மகாபாரதத்தில் காப்பாற்றுவார். படத்தில், நாயகியின் தாவணி பிடுங்கப்படும் போது அதை தடுத்து நிறுத்துபவர், பூவராகவன்தான். கடைசியில், கிருஷ்ணன் காலில் இரும்பு கம்பி குத்தி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதே போலத்தான் பூவராகவனும் இப்படத்தில் இறந்து போவார். 


கல்கி அவதாரம்-கோவிந்த்ராஜ் ராமசாமி:


கலியுகத்தின் கடவுள், என விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை கூறுவர். இவர்தான், தற்போதைய உலகை அவதாரம் எடுத்து காப்பாற்றுவார் என நம்பப்படுகிறது. இந்த அவதாரம்தான், படத்தில் விஞ்ஞானியாக வரும் கோவிந்தராஜ் ராமசாமி. 


15 ஆண்டுகளை கடந்த தசாவதாரம்..


சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த படங்களுள் ஒன்று, தசாவதாரம். பிரமாதமான ஸ்கரீன் ப்ளே, படத்தில் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் என தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் போல அவ்வளவு விஷயங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. கமல் ஹாசனுக்கு ‘உலக நாயகன்’ என்ற பட்டம், தசாவதாரம் படத்தின் மூலமாகத்தான் கிடைத்தது. 


மேலும் படிக்க | சிறுவயதிலேயே சினிமா-இசைப்புயலின் உறவினர்..ஜி.வி.பிரகாஷ் குறித்த அறியாத தகவல்கள் இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ