கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி! அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல் ட்வீட்
பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது எனமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியா நிலையில், அவருக்கு கோவிட் தொற்று (Coronavirus) இருப்பது உறுதியாகி உள்ளது.
அதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் (Kamal Haasan Twitter) பக்கத்தில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) நடித்து வரும் "விக்ரம்" படம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.
"விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR