பா.ரஞ்சித் - கமல்ஹாசன் இணையும் புதிய கூட்டணி!

கமல்ஹாசன் பிறந்த நாள் (Kamal Haasan Birthday) அன்று இயக்குனர் பா.ரஞ்சித் கமலிடம் கதையை சொல்லி உள்ளார். கதை பிடித்ததால் இணைந்து பணியாற்ற ஓகே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2021, 01:42 PM IST
பா.ரஞ்சித் - கமல்ஹாசன் இணையும் புதிய கூட்டணி!

சினிமா செய்திகள்: மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்துடன் கமல்ஹாசன் இணைய உள்ளார். சார்பட்டா பரம்பரையைப் பார்த்த பிறகு, கமல்ஹாசன் ரஞ்சித்தை அழைத்து பாராட்டினார். 

தற்போது கமல் நடித்துக் கொண்டு இருக்கும் விக்ரம் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில்  கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசன் பிறந்த நாள் (Kamal Haasan Birthday) அன்று இயக்குனர் பா.ரஞ்சித் கமலிடம் கதையை சொல்லி உள்ளார். கதை பிடித்ததால் இணைந்து பணியாற்ற ஓகே தெரிவித்ததாக கூறப்படுகிறது. பா. ரஞ்சித்தும் இந்த வாய்ப்புக் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இந்த புதிய கூட்டணி குறித்தும் இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் (Kamal Haasan Fans) மகிழ்ச்சியில் உள்ளனர். லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் நடித்து முடித்த பிறகு, மகேஷ் நாராயணனுடன் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் கைகோர்க்கிறார் என்று கூறபபடுகிறது. கமல்ஹாசனும் வெற்றிமாறனும் தங்கள் கூட்டணி சேர்வதை இறுதி செய்திருந்தாலும், சூர்யாவின் "வாடிவாசல்"படத்தை முடிக்க இயக்குனர் வெற்றிமாறனுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது. 

ALSO READ |  ஜெய்பீம் பார்த்தேன், கண்கள் குளமானது; கமலின் நெகிழ்ச்சியான பதிவு

இந்த தாமதத்தால், மகேஷ் நாராயணன் படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் (Pa. Ranjith) படத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனுக்காகவும் ஒரு திட்டம் இருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் அதுவும் நடக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) தெரிவித்துள்ளார். தற்போது இயக்குனர் வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) லோகேஷ் கனகராஜ் இயக்கும் "விக்ரம்" படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு "விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ்" வெளியிடப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்றது மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ALSO READ |  கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி- தூள் கிளப்பும் வெற்றிமாறன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News