கமல் ஹாசனின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை விளக்கம்
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதை அடுத்து அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது.
இதை அடுத்து கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு (Kamal Haasan) கொரோனா (Coronavirus) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து பதிவிட்டுள்ளார். அதில்.,
ALSO READ | கமலுக்கு கொரோனா தொற்று; பிக்பாஸ் நிலை என்ன
அதில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று (Coronavirus) உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருந்த்தார்.
இதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்., நடிகர் கமல்ஹாசனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கமல்ஹாசன் விரைவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி! அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல் ட்வீட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR