காேலிவுட்டின் மூத்த நடிகர்களுள் ஒருவராக விளங்கும் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு பெண் வேடத்தில் ஒரு படத்தில் நடத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக நாயகன் கமல்ஹாசன்..!


தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர்களுள் முதன்மையான இடத்தை பிடித்திருப்பவர், கமல்ஹாசன். 5 வயதிலிருந்து சினிமாவால் வளர்க்கப்பட்ட பிள்ளையாக பார்க்கப்படும் இவர், தனது ரசிகர்களால் ‘ஆண்டவர், நம்மவர், உலக நாயகன்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர், தற்போது பல கோடி பட்ஜெட் படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார். எந்த கதாப்பாத்திரம் எடுத்தாலும் அதற்கென்று தனியாக தன்னை மெருகேற்றிக்கொள்ளும் மாபெரும் கலைஞராக பார்க்கப்படுகிறார். இவர் இதுவரை பல நூறு வேடங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்திருப்பார். அதிலும் குறிப்பாக இவர் 10 வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படம் இன்றளவும் பெரும் பேசுபொருளாக உள்ளது. 


மேலும் படிக்க | தனுஷ் நடித்ததிலேயே ‘இந்த’ படங்கள்தான் டாப்..! உங்களுக்கு பிடித்த படம் லிஸ்டில் உள்ளதா..?


பெண் வேடத்தில் கமல்..!


கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘அவ்வை ஷண்முகி’ படத்தில் முதன் முதலாக பெண் வேடமிட்டு நடித்திருந்தார் கமல். அசல் முகத்திற்கும் படத்தில் வரும் பெண் முகத்திற்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாத அளவிற்கு மேக்-அப் போட்டு, சேலை கட்டி நடித்திருப்பார் கமல். இப்போது பெண் வேடம் போட்டு நடிக்கும் பல நடிகர்களுக்கு பிள்ளையார் சுழியோ அவ்வை ஷண்முகிதான். இதே போல 2008ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘தசாவதாரம்’ படத்திலும் கிருஷ்ணேவேனி பாட்டி கதாப்பாத்திரத்திரமாக நடித்திருந்தார், கமல். இந்த படத்தில் 10 கதாப்பாத்திரத்திற்கும் ஒவ்வோரு தோற்றம், அதிலும் சில கதாப்பாத்திரங்கள் பேசும் மொழியே வேறு. இதை அசால்டாக செய்து உலகநாயகன் பட்டம் பெற்றவர் இவர். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ஸ்ரீரங்கத்து பாட்டியாக வந்திரு்தார் கமல். தற்போது அதே போல 15 வருடங்களுக்கு பிறகு இன்னொரு படத்திலும் அவர் பெண் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 


இந்தியன் 2:


ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதிலும்நடிகர் கமல்தான் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் ஆப்ரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் நடைப்பெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த படத்தில்தான் கமல் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கமல் மேக்-அப் போடும் போட்டோக்கள் வெளியாகின. இதை வைத்து இவர் இந்தியன் படத்தில் பெண் வேடத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கணக்கு போட்டுள்ளனர். 


அடுத்த பாகம் இருக்கிறதா..? 


இந்தியன் 2 படத்திற்கு பிறகு இந்தியன் 3 படமும் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், “இந்தியன் 3 படத்தையும் வெளியிட வேண்டும் என்று ஆசை உள்ளது..” என தெரிவித்தார். இதையடுத்துதான் இந்தியன் 3 படம் குறித்த வதந்திகள் பகிரப்பட்டன. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் சினிமா வட்டாரங்களில் இன்னொரு தகவலும் வட்டமடித்தது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களுக்கான படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியன் 2 படத்திற்கு அடுத்த பாகம் இருப்பது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளது. 


கமலின் அடுத்த படம்…


இந்தியன் 2 படப்பிடிப்பில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ள கமல், அடுத்த இன்னொரு பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கிறார். ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் ஹீரோவாக நடித்துவரும் பட் ப்ராஜெக்ட கே-கல்கி ஏடி 2898. இந்த படத்தில் கமல் பயங்கர வில்லனாக வருகிறார். இதில் நடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள கமல், இதற்காக சுமார் 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தினை நாக் அஷ்வின் இயக்குறிார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | சந்தானத்தின் DD Returns படம் எப்படி இருக்கு...? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ