ரசிகர்களால் அன்புடன் ‘உலக நாயகன்’ என்று அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். மூன்றரை வயது முதல் சினிமாவின் குழந்தையாகவே வளர்ந்து வரும் இவர், ஒரு படத்தில் 6 நாட்கள் நடிக்க பல கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமலை தூக்கிவிட்ட படங்கள்..


நடிகர் கமல்ஹாசனின் மார்கெட், கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவர் இயக்கி படங்களும், அவர் தயாரித்த சில படங்களும் அவருக்கு ஏற்றத்தை தராத நிலையில், அதற்கு திருப்புமுனையாக அமைந்த படம், ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படம், கமல்ஹாசனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அவர் வரிசையாக பல படங்களில் கமிட் ஆனார். 


மேலும் படிக்க | Dunki Twitter Review: ஷாருக்கானை சறுக்கி விட்டதா ‘டன்கி’ திரைப்படம்? ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!


6 நாள் கால்ஷூட்டிற்கு பல கோடி சம்பளம்..


நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் கமிட் ஆன படம் ‘கல்கி 2898 AD’. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பசுபதி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வில்லனே, நம் கமல்ஹாசன்தான். இதில் நடிக்க இவர் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்த 15 நாட்கள் நடிக்க இவருக்கு ரூ.150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 15 நாட்களில், கமல் மொத்தமாக 6 நாட்கள் நடித்து கொடுத்துள்ளாராம். இந்த 6 நாட்களின் காட்சிகள் கல்கி 2898 AD படத்தின் முதல் பாகத்தில் வர உள்ளதாம். இந்த 6 நாள் நடித்ததற்கே கமலுக்கு ரூ.75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல், இதுவரை வாங்கிய சம்பளங்களிலேயே இதுதான் மிகவும் உயர்ந்த சம்பளமாம். 


ஹெச்.வினோத் உடனான கமல் படம்..


நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஹெச்.வினோத்துடன் இணைகிறார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இது, கமலின் 233வது படமாகும். படத்தின் அறிவிப்பு வெளியானதே அன்றி, அது தவிர வேறு எந்த அறிவிப்புமே வெளிவரவில்லை. படத்தின் கதை கமல்ஹாசனுக்கு ஒத்து வரவில்லை என்றும், இதனால் இப்படத்தின் வேலைகள் தொடங்கப்பட போவதில்லை என்றும் கூறப்படுகிறது. 


கமல், மனிரத்னமுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு கைக்கோர்த்திருக்கும் படம், ‘தக் லைஃப்’. இந்த படத்தின் டைட்டில் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் கமல் ‘ரங்கராய சக்திவேல் நாயக்கன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடத்திருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கபப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | விவாகரத்தானவர்களை கரம் பிடித்த திரை பிரபலங்கள்! லிஸ்டில் இத்தனை பேரா..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ