அடுத்த படத்தின் பணியை தொடங்கிய ஹெச்.வினோத்! ஹீரோ யார் தெரியுமா?

ஹெச்.வினோத் மற்றும் கமல்ஹாசன் இணையப்போவது உறுதி என்றும், இந்த படத்திற்கு 'KH233' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 10:18 AM IST
  • இயக்குனர் ஹெச்.வினோத்-கமல்ஹாசன் இணையும் படத்தின் பெயர் 'KH233'.
  • 'KH233' படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளை ஹெச்.வினோத் தொடங்கியுள்ளார்.
  • 'KH233' படம் குறைந்த பட்ஜெட் செலவில் உருவாகவுள்ளது.
அடுத்த படத்தின் பணியை தொடங்கிய ஹெச்.வினோத்! ஹீரோ யார் தெரியுமா? title=

கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் ஹெச்.வினோத்.  இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார்.  இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஹெச்.வினோத்தும் ஒன்றாக மாறினார்.  அதன் பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமான அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார்.  நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்கள் ஹெச்.வினோத்-அஜித்குமார் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  சமீபத்தில் வெளியான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

மேலும் படிக்க | A Girl and an Astronaut: விண்வெளி வீரரின் நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் மோமெண்ட்

அடுத்ததாக ஹெச்.வினோத் எந்த நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார்? எப்போது அடுத்த படத்தின் பணியை தொடங்கப்போகிறார்? என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  இவரது அடுத்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ள நிலையில், கமல்ஹாசன், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை வைத்து புதிய படத்தை எடுக்க இயக்குனர் விரும்புவதாக தகவல்கள் முன்னர் வெளியானது.  சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கூட இயக்குனர் தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்காக ஒரு ஸ்க்ரிப்டை உருவாக்கப்போவதாக கூறியிருந்தார், இதன் மூலம் இயக்குனர் உலகநாகனுடன் இணைந்து படம் பண்ணப்போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.  

தற்போது வெளியாகியுள்ள லேட்டட்ஸ் தகவல்களின்படி, ஹெச்.வினோத் மற்றும் கமல்ஹாசன் இணையப்போவது உறுதி என்றும், இந்த படத்திற்கு 'KH233' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படம் குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்படும் என்றும், இந்தியன்-2 படம் முடிந்ததும் இந்த ஆண்டின் இறுதியில் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   'KH233' படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளை இயக்குனர் ஹெச்.வினோத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.  மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன்-2' படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.  அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் கமல்ஹாசன் 'KH234' படத்திலும், அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கத்திலும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Review: Unlocked கிரைம் திரில்லர் கொரிய திரைப்பட ரிவ்யூ! திகிலூட்டும் சஸ்பென்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News