ஆந்திரா அரசின் என்டிஆர் தேசிய திரைப்பட விருதான நந்தி விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இந்த ஆண்டு என்.டி.ஆர். விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன்,  ரஜினிகாந்த்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி மாதம் விஜயவாடாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.


தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறுயது,


2016-ம் ஆண்டுக்கு என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.


ஆந்திர அரசின் விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.