எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல் ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன் நேற்று எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார்.


இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, 


‘எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என்று அவர் கூறியிருந்தார்.


இதைதொடர்ந்து நேற்று எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்களைச் சந்தித்த அவர் சாம்பல் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிந்துள்ளார்.