கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஹெச்.வினோத்.  பண ஆசைக்காட்டி மோசடி செய்யும் கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஹெச்.வினோத் நடிகர் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.  இந்த படம் இயக்குனர் ஹெச்.வினோத்தை மட்டுமல்ல, கார்த்தியையும் அவரது கேரியரில் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி கொண்டுபோனது.  அதன்பிறகு அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜீத்குமாரை வைத்து 'நேர் கொண்ட பார்வை', 'வலிமை' மற்றும் 'துணிவு' ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.  ஹெச்.வினோத்-அஜித்குமார் கூட்டணியில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முதன் முதலாக ஆடி காண்பித்தபோது சரத்குமார் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? ராகவா லாரன்ஸ்



தொடர்ச்சியாக அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கப்போகிறார்.  'விக்ரம்' படம் கமலுக்கு சிறந்த கம்பேக்காக அமைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  அந்த வகையில் கமல்ஹாசனின் 233வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது இந்த மெகா ஆக்‌ஷன் படத்தில், கமல் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஒரு மாதத்திற்குள் முடித்துவிடுவதாக இயக்குனர் ஹெச்.வினோத் உறுதியளித்துள்ளார்.  இந்த 'கேஹெச்233' மல்டிஸ்டாரர் படத்தில் விஜய் சேதுபதி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  இன்னும் சில வாரங்களில் படத்தின் பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.


தற்போது கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் மே மாத இடையில் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தின் இடையில் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைந்து 'கேஹெச்233' படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.  அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன், மணிரத்னத்தின் 'கேஹெச் 234' படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | "அயலான்" படம் குறித்து முக்கிய அறிவிப்பு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ