)
'மாஸ்டர்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி 'லியோ' படத்தின் மூலம் இணைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தை திரையில் காணவும், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டை கேட்டறியவும் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். திரையுலகில் அதிகம் பேசப்படும் முக்கியமான படங்களில் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பகுதியில் படத்தின் சில முக்கியமான படம்பிடிக்கப்பட்டது, அடுத்ததாக சென்னையில் சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் மற்றும் சாண்டி போன்ற பலர் நடித்துள்ளனர்.

லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 'லியோ' படம் அக்டோபர் 19-ம் தேதி முதல் உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. ரசிகர்கள் பலரும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது? எந்த பகுதியில் நடைபெறும்? என்று எதிர்பார்த்து கொண்டு ஆர்வமாக காத்திருக்கின்றனர். வரும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அன்றைய தினம் 'லியோ' படத்தின் மிகப்பெரிய அப்டேட் வெளியிடப்படும் என்று ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விருதுகள் வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது 'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னைக்கு வெளியே நடத்த நடிகர் விஜய் விரும்புவதாகவும், திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஒரு பகுதியில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 'வேலாயுதம்' மற்றும் 'தலைவா' போன்ற படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளும் இதைப்போலவே தென் தமிழகத்திலுள்ள பகுதியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் மூலம் தென் தமிழக பகுதிகளிலுள்ள தனது ரசிகர்களை நடிகர் விஜய் உற்சாகப்படுத்த இருக்கிறார். லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி எந்த நகரத்தில் நடைபெறும் என்பதன் தெளிவான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ