கமல்ஹாசன் சொத்து மதிப்பு: 2024 ஆம் ஆண்டின் படி நடிகர் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு மற்றும் தற்போது அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரானவர் நடிகர் கமல்ஹாசன். இவர் பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர். கமல்ஹாசனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது வரை 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் படங்களில் நடிப்பதை தவிர தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது என்றே கூற வேண்டும். அதுமட்டுமின்றி இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளத்தை உயர்தினார்.


மேலும் படிக்க | Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!


கமல்ஹாசன் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு அரசிடம் அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடிக்கும் மேல் இருக்கிறது என சொல்லப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறாராம். கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றது. கமல்ஹாசன் வீட்டின் மதிப்பு ரூ. 19 கோடி இருக்குமாம். இவருடைய வீடு மட்டுமின்றி கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து ஆசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 92 கோடி என பிரபல பத்திரிகை கூறுகிறது. கமலுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது. இங்கிலாந்தில் கமல்ஹாசனின் பெயரில் ஒரு சொத்து உள்ளது. கமல் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி லண்டனுக்கு செல்வதால், அங்கு முதலீடு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்னையை சுற்றி உள்ள அவருக்கு சொந்தமான வணிக இடங்கள் மற்றும் பிற ரியல் எஸ்டேட் போன்றவையும் உள்ளது.


சொகுசு கார்கள் எவ்வளவு உள்ளது?
கமல்ஹாசன் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களை வைத்துள்ளார். இந்த இரண்டு கார்களின் மதிப்பு சுமார் ரூ. 1.30 கோடி (BMW 730LD) , ரூ. 2.80 கோடி (Lexus Lx 570) ஆகும். இதுமட்டுமின்றி oyota Prado - ரூ. 96 லட்சம், Mitsubishi Pajero - ரூ. 28 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை, Mercedes Benz E 220 - ரூ. 76 லட்சம், Range Rover Evoque -ரூ. 76 லட்சம் போன்ற கார்களையும் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.


கமல் தற்போது கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் Thug Life படத்தின் புரமோ வீடியோ வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இது தவிர இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து Project K மற்றும் வினோத் படங்களில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.


மேலும் படிக்க | G.O.A.T: விஜய்யால் தமிழ் சினிமாவிற்கு இத்தனை கோடிகள் இழப்பா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ