G.O.A.T: விஜய்யால் தமிழ் சினிமாவிற்கு இத்தனை கோடிகள் இழப்பா?

தமிழக வெற்றி கழகம் என்ற தனது புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

1 /5

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற அவரது புதிய கட்சியை அறிவித்தார், மேலும் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.  

2 /5

தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவரது கடைசி படமாக தளபதி 69 படத்தின் நடிக்க உள்ளார்.  

3 /5

இந்நிலையில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் கோலிவுட்டிற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படமான லியோ கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்தது.  

4 /5

விஜய்யின் படங்கள் திரையரங்கை தாண்டி ஓடிடி, தொலைக்காட்சி என அனைத்து இடங்களிலும் சாதனை படைத்து வருகிறது.  விஜய் ஒரு வருடத்திற்கு இரண்டு படங்கள் வீதம் நடித்து வருகிறார்.  

5 /5

விஜய்யின் படங்கள் வெளிவராமல் போனால் தமிழ் சினிமாவிற்கு ஒரு வருடத்திற்கு 1000 முதல் 1200 கோடிகள் வரை இழப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.