தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக கருதப்படுபவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.  தனது பன்முக நடிப்பு திறமையால் இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார்.  தற்போது நடிகர் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மஹேஸ்வரி, நந்தினி போன்ற பலர் நடித்துள்ள இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார், இதில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸ்!


மேலும் இப்படத்தில் கமலை இளமையாக காண்பிக்க மேற்கொண்ட தொழில்நுட்பங்களுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ரசிகளால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் ஜூன்-3ம் தேதி வெளியாகுகிறது.  அதனைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  சமீபத்தில் வெளியான செய்தியின்படி, முத்தையா இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது, ஆனால் அவர் படத்தில் கமல் நடிக்கவில்லை என்றும், முத்தையா இயக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.



இந்நிலையில் நடிகர் கமல், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.  ஆனால் இப்படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லை தயாரிப்பு பணியை மட்டும் தான் மேற்கொள்ள போகிறாரா என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை, இதுகுறித்த உண்மையான செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதியை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR