தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற போகிறது என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டது. இருவரும் அடிக்கடி கோயில்களுக்கும் சென்று வருகின்றனர். சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பின்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டது.
மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸ்!
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது, அதன்பிறகு இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர். இருவரும் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, நயன்தாராவின் கேரளா வீட்டிற்கு செல்வது என சுற்றுப்பயணத்தில் இருந்து வந்தனர். இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் 9ஆம் தேதி திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறப் போவதாக கூறப்படுகிறது, இதற்காக ஏற்கனவே அந்த இடங்களை பார்வையிட்டு இந்த ஜோடி இன்று திருமணத்திற்கான தேதியை முன்பதிவு செய்து விட்டனர் என்று தகவல்கள் வெளியாகியது. தமிழ் சினிமாவில் உள்ள பல ஜோடிகள் திருமணம் செய்துள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இணைய உள்ளனர். விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து AK62 என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய் டிவிக்கு மீண்டும் செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR