லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி மெகா ஹிட் படமாக உருவெடுத்துள்ளது 'விக்ரம்' படம்.  இந்த ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் திருப்தியளிக்காத நிலையில் விக்ரம் படம் வெளியாகி அந்த அதிருப்திகளை மறக்க செய்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.  படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றிபெற்றுள்ளது.  இந்த ஆக்ஷன் திரைப்படம் தமிழகம் முழுவதும் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது, அதேபோல உலகளவில் இப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விஜய் படத்துக்காக பாலிவுட் வாய்ப்பை இழந்த நெல்சன் திலீப்குமார்


இந்த படத்தில் கமலுடன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா போன்ற நட்சத்திரங்கள் நடித்து படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளனர்.  பல சாதனைகளை படைத்துள்ள இந்த படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  'விக்ரம்' படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது என்றும், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் 'விக்ரம்' படம் ஜூலை-8ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.  கமல்ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனின் படத்தில் நடிப்பார் என்றும், அடுத்ததாக பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தையும், அதனைத்தொடர்ந்து 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 3' படத்தின் பணிகளை தொடங்குவார்.


மேலும் படிக்க | தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR