கந்துவட்டி கொடுமையை சினிமா துறையும் தடுக்க வேண்டும்: கமல்
பைனான்சியர் தொல்லையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த நவம்பர் 22-ம் தேதி அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பைனான்சியர் தொல்லையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த நவம்பர் 22-ம் தேதி அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தாலேயே, நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணத்தை குறித்து அவர் எழுதிய கடிதத்தில், நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என். அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். அடி ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கிருவேன் என்றார். என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பைனான்சியர் ஜி.என். அன்புச்செழியன் காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடிகர் சசிகுமார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. இதைக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கந்துவட்டி பிரச்சனையால் அசோக்குமாரின் தற்கொலை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு,