பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் கங்கனா பாஜகவின் தீவிர ஆதரவாளர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவுக்கு ஆதரவாக அவர் கூறும் கருத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சையில் முடிபவை. அரசியல் மட்டுமின்றி பல்வேறு விஷயங்களில் தனது மனதில் தோன்றியதை பட்டென பேசும் பழக்கம் உடையவர் கங்கனா.


அவர் தற்போது தாகத் என்ற படத்தி நடித்தார். இப்படம் கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கங்கனா ரணாவத் ஆக்‌ஷன் ரோலில் நடித்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் 'தாகத்' திரைப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.



குறிப்பாக படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.


அதாவது 90 கோடி மதிப்பில் தயாரான தாகத் திரைப்படம் வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாலிவுட் உலகில் பேசப்படுகிறது. கங்கனாவின் கேரியரிலேயே இந்தப் படம்தான் மிக மோசமாக தோல்வியடைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறார்.


மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?


இந்நிலையில் 'தாகத்' திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரண் ஆவத் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி (எமர்ஜென்சி) காலக்கட்டத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறது.


இந்தப் படத்திற்கு “எமர்ஜென்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், கங்கனா ரணாவத்தே படத்தில் நடிக்க இருப்பதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கங்கனா ரணாவத் இயக்கி நடித்த மணிகர்னிகா படம் மாபெரும் வெற்றியடைந்தது.


மேலும் படிக்க | தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்!


காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறிவரும் கங்கனா தற்போது எமர்ஜென்சியை மையப்படுத்தி படம் எடுக்கப்படவிருப்பதால் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR