Thalaivi: கங்கனா ரனாவத்தின் தலைவி படத்துடைய சமீபத்திய அப்டேட், ரிலீஸ் தேதி என்ன?
சினிமா ரசிகர்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள `தலைவி` படமும் ஒன்றாகும். நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாகும் இது.
Kollywood News: சினிமா ரசிகர்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தலைவி' படமும் ஒன்றாகும். நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாகும் இந்த படம்.
இந்த படத்தைப்பற்றிய சமீபத்திய செய்தி என்னவென்றால், இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு சென்சார் போர்டின் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.
தமிழ் (Tamil Cinema), தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ள இப்படத்தை விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். விஜய் இயக்கிய படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்பு அடுத்த சில நாட்களில் தணிக்கை செய்யப்படும்.
ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' (Thalaivi) ஏ.எல் விஜய்யால் இயக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவாக நடிக்க, அரவிந்த் சுவாமி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராக நடித்துள்ளார்.
ALSO READ: Kollywood: எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்
ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். முன்னாள் நடிகையும் மறைந்த முதல்வருமான ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது. ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தலைவி படத்தின் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. கோவிட் -19 ஊரடங்கு முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இயக்குனர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கங்கனா ரனாவத் (Kangana Ranaut), தனது சமூக ஊடக கணக்கில், "எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரான #தலைவி அணியின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். படம் வெளிவர ஆவலோடு காத்திருகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தலைவிக்குப் பிறகு, விஜய் ஒரு OTT திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது, இது 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்று பெயரிடப்பட்டது. இது தமிழ்-தெலுங்கு இருமொழிகளிலும் வெளிவர உள்ளதாகவும், இந்த படத்தில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
'தலைவி' படத்தின் நாயகி கங்கனா, தேஜஸ் மற்றும் தாகட் ஆகிய படங்களின் படப்பிடிப்பில் பிஸியாகி உள்ளார்.
ALSO READ: 'தலைவி’ முதல் பாடல் நாளை ரிலீஸ்: மழை பாடலுக்கு இன்றே பொழிகிறது பாராட்டு மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR