Kollywood: எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்

நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்த நாளன இன்று அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படக் குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவை பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2021, 04:52 PM IST
  • எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்
  • ரோஜா திரைப்படம் அவருக்கு இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற்றுத்தந்தது.
  • ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படங்கள் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தன
Kollywood: எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர் title=

நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்த நாளன இன்று அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படக் குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவை பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகிறது. 

நடிகர் அரவிந்த்சாமியின் திரைப் பயணம் மணிரத்தினத்தின் தளபதியில் தொடங்கியது. ரோஜா திரைப்படம் அவருக்கு இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற்றுத்தந்தது. ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படங்கள் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தன

குணச்சித்திர நடிகர் டெல்லி குமாரின் மகன் அரவிந்த் சாமி. புகழின் உச்சத்தில் இருக்கும்போதே, திரைத்துறையில் இருந்து விலகி தொழில் செய்து வந்தார். மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்ததால் களத்தில் இறங்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

Also Read | #Thalapathy65 ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் பற்றிய மாஸ் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தற்போது, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார் அரவிந்த்சாமி. டைரக்டர் விஜய் இயக்கத்தில் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார்.

விஷ்ணு இந்துரி, ஷைலேஷ் ஆர்.சிங் இணைந்து தயாரித்துள்ள தலைவி படம் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்டைலாக எம்ஜிஆர்.,நிற்பது போன்ற அரவிந்த்சாமியின் போஸ்டரை தலைவி படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டருடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள விஷ்ணு இந்துரி, வரும் ஆண்டில் நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரியட்டும். தலைவி படத்தில் அவருடன் பணியாற்றியது அருமையான தருணம் என பதிவிட்டுள்ளார்.

அரவிந்த்சாமி நடிப்பில் தயாராக உள்ள மற்றொரு படம் நரகாசுரன். இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான சோனியில் வெளியாகலாம். நரகாசுரன் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார்.

Also Read | மருத்துவ சிகிச்சைக்காக இன்று ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News