MGR Magan: சசிகுமார், சத்யராஜ், நடிப்பில் எம்ஜிஆர் மகன் 23ஆம் தேதி வெளியீடு

நடிகர்கள் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் பொழுதுப்போக்கு குடும்பத் திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2021, 10:07 AM IST
  • சசிகுமார், சத்யராஜ், நடிப்பில் எம்ஜிஆர் மகன் 23ஆம் தேதி வெளியீடு
  • ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
  • கொரோனா பரவலால் தள்ளிப் போடப்பட்டு, ஜூன் 23இல் ரிலீசாகிறது
MGR Magan: சசிகுமார், சத்யராஜ், நடிப்பில் எம்ஜிஆர் மகன் 23ஆம் தேதி வெளியீடு title=

சென்னை: நடிகர்கள் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் பொழுதுப்போக்கு குடும்பத் திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார்.

ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த எம்ஜிஆர் மகன் பட வெளியீட்டை தள்ளிப் போட வைத்தது கொரோனா இரண்டாம் அலை. ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்தை எட்ட, தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. லாக்டவுன் அறிவிப்பால், எம்ஜிஆர் மகன் திரைப்பட ரிலீஸும் முடங்கியது.
 
இந்த திரைப்படத்தில் சத்யராஜ் அப்பாவாகவும், நடிகர் சசிகுமார் மகனாகவும் நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து சரியான நகைச்சுவை விருந்தை கொடுத்திருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக எம்ஜிஆர் மகன் திரைப்படம், ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

Read Also | Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்

கொரோனா பாதிப்பால், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காலகட்டம் அது. அப்போது, 50 சதவீத பார்வையாளர்கள், 100 சதவீத என்டர்டெயின்மெண்ட் என விளம்பரப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் ஏப்ரல் 23ஆம் தேதியன்று திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தாக்கம் உச்சகட்டத்தை அடைய, லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பட வெளியீடு தள்ளிப் போனது.

சசிகுமார் நீண்ட காலமாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவரது எதிர்பார்ப்பை எம்.ஜி.ஆர் மகன் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை படத்தின் டிரெய்லர் ஏற்படுத்துகிறது. “யு” சான்றிதழ் பெற்ற இந்தப் படம், அனைத்து வகையான பார்வையாளர்களையும் ஈர்க்கும்.

கொரோனாவின் அச்சத்தால் திரையரங்கிற்கு செல்ல விருப்பமில்லையா? கவலை வேண்டாம்.  இந்த திரைப்படம் சில நாட்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு வரும் 

Also Read | எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News