Suriya 42 Update: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சூரரை போற்று படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். குறிப்பாக, சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கங்குவா என்று வைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தின் மூலம் முதன் முறையாக பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் கை கோர்க்கிறார், சூர்யா. இந்த படம், 100 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள கதை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, ஃபேண்டசி ஃபிக்ஷனாகவும் இக்கதை உருவாகி வருகிறது. சிறுத்தை சிவாவுடனான கூட்டணி-இதுவரை தொடாத பாணியிலான கதை என கங்குவா படத்தில் முழுக்க முழுக்க புதுமை காட்டியுள்ளார் நடிகர் சூர்யா. மேலும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே நாளுக்குநாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. சூர்யாவை புதிய அவதாரத்தில் பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். இதையடுத்து, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 80 காேடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.


மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?


இந்த நிலையில் தற்போது சூர்யாவின் கங்குவா படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதுதான் படத்தின் க்ளைம்கேஸ்க்கான ஷூட்டிங் என்றும் கூறப்படுகிறது. மேலும் படத்தை விரைவில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இறங்குவதற்கு இயக்குநர் சிறுத்தை சிவா ஆயத்தமாகியிருப்பதால் பயங்கர விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்தது. மேலும் கொடைக்கானலில் நடந்துவந்த கங்குவா ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஷூட்டிங் நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினருக்கு சூர்யா கொடைக்கானலில் வைத்தே பிரியாணி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. 


அத்துடன் கங்குவா படத்தில் பணியாற்றிய உதவி சண்டை பயிற்சியாளருடன் அவர் எடுத்துக்கொண்ட படம் வெளியாகியுள்ளது. அதில், சூர்யா பயங்கரமாக இருக்கிறார். மேலும் இந்த புகைப்படும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



இதனிடையே தற்போது கங்குவா படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகவும், முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாவது பாகத்துக்கான லீட் இருக்கும் என்று தெரிகிறது. நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சமந்தா மிகவும்... கஸ்டடி பட பிரமோஷனில் விவாகரத்து பற்றி நாக சைதன்யா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ