சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காக பெரிதும் பாராட்டுகளை பெற்றது. இந்தத் திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மொத்தம் மூன்று விருதுகளை 'கண்ணே கலைமானே' குவித்து சாதனை படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் 'கண்ணே கலைமானே' திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் வென்றுள்ளனர். 



மேலும் படிக்க | 100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... கையோடு வெளியான ட்ரெய்லர் அப்டேட்





இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, "இயற்கை விவசாயிக்கும் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்த நேர்மையான வங்கி அதிகாரிக்குமான வாழ்வியல் உண்மை பேசும் 'கண்ணே கலைமானே' இன் திரைப்பட விழா பதிப்பை (ஃபெஸ்டிவல் வெர்ஷன்) 2019 ஆம் ஆண்டு மத்திமத்தில் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் உதவியுடன் உருவாக்கியிருந்தேன். திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில் 1.43.08 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக யதார்த்தத்திற்கு நெருக்கமாக அனைத்து நிலையிலும் உருவாக்கியிருந்தோம். 


இரண்டு விருதுகளை கொல்கத்தா திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' பெற்ற நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் வந்து அனைத்தையும் முடக்கிப் போட்டது. சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை பார்த்த உலக சினிமா பாஸ்கரன் உள்ளிட்ட அருமை நண்பர்கள் இதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாமே என்றனர். காலதாமமெனினும் காலஎல்லைகள் பற்றிக் கவலைப்படாத பன்னாட்டு திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் நம்பிக்கையோடு அனுப்பினோம். எங்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகள் பெற்றது மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார்.


அதேசமயம் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்துக்காக மராட்டிய மாநிலத்தில் பூனா தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் நடைபெற்ற 5வது குளோபல் இந்தியா பன்னாட்டு திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘சிறந்த நடிகர்’ விருது வழங்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


'கண்ணே கலைமானே' படத்தில் உதயநிதி , தமன்னா, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், பாபி சிம்ஹா, 'பூ' ராம் , வடிவுக்கரசி, வசுந்தரா, சரவன்சக்தி, தீப்பெட்டி கணேசன், அம்பானி சங்கர், ஷாஜிஆகியோர் நடித்திருந்தார். இந்தப் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஒளிப்பதிவு ஜலந்தர் வாசன் செய்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | எல்லாம் ஓகே ஆனால் இதுக்கு மட்டும் நோ - ராகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ