சீனு ராமசாமி இயக்கி வரும் “கண்ணே கலைமானே” படத்தின் டிரைலர் வெளியிடு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவர உள்ள "கண்ணே கலைமானே" படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 9, 2019, 06:22 PM IST
சீனு ராமசாமி இயக்கி வரும் “கண்ணே கலைமானே” படத்தின் டிரைலர் வெளியிடு

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் "கண்ணே கலைமானே". இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு நாயகியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வடிவுக்கரசி, வசுந்த்ரா காஷ்யாப், ஷாஜி சென், வெட்ரிகுமரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார். பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ஒளிப்பதிவு ஜலந்தர் வாசன். தனது ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மூலம் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கிறார்.

தர்மதுரை படத்துக்கு பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கம் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

வீடியோ:

 

More Stories

Trending News