83 Movie Teaser: 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கிரிக்கெட் போட்டி ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு, 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே முக்கியக் காரணம். கபில் தேவ் தலைமையில் அந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணியை, வெறும் கத்துக்குட்டி அணியாகவே அனைவரும் பார்த்தனர். அதுவரை நடைபெற்றிருந்த 2 உலகக் கோப்பைகளையும் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. பலம் வாய்ந்த அந்த அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் (Kapil Dev) தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.


அதன்பிறகு கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. தோனி தலைமையில் கோப்பையைக் கைப்பற்றியதை அறிந்திருக்கும் பலருக்கும் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு செய்தியாக தெரிந்திருந்தாலும், அந்த காலகட்டம் எப்படி இருக்கும் என்ற பார்வைகூட பலருக்கும் தெரியாது. அதனை கண்முன்னே கொண்டு வரும் ஒரு கலைப்படைப்பாக தான் ‘83’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. 


ALSO READ |  நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ் ஓபன் டாக்!


இயக்குநர் கபீர்கான் (Kabir Khan) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா (Actor Jiiva) உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதைகரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் (Deepika Padukone) உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ’83’ திரைப்படத்தின் டீசர் இப்போது வெளியாகியிருக்கிறது. நவம்பர் 30 ஆம் தேதி டிரெய்லர் வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


 



ஏற்கனவே, தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்த நிலையில், தற்போது கபில்தேவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


ALSO READ |  கபில்தேவ் போல் உருமாறிய ரன்வீர் சிங்; வைரலாகும் புகைப்படம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR