கபில்தேவ் போல் உருமாறிய ரன்வீர் சிங்; வைரலாகும் புகைப்படம்!

கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 6, 2019, 04:03 PM IST
கபில்தேவ் போல் உருமாறிய ரன்வீர் சிங்; வைரலாகும் புகைப்படம்!

கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக ஜொலித்த கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். கபீர்கான் இயக்கும் இந்தப் படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்தின் கேரக்டரில்  விஜய் தேவரகொண்டாவும் ,முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவாவும் நடித்து வருகின்றனர்.   

இந்நிலையில் ரன்வீர் சிங்கின் பிறந்த நாள் பரிசாக இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்டரில் ரன்வீர் சிங் கிட்டதட்ட கபில் தேவ் போலவே உள்ளார். ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

‘83’ திரைப்படம் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை அடிப்படையாகக் கொண்டது, இந்த தொடரில் தான் இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டு உலகை திகைக்க வைத்தது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2020-ல் வெளியாகும் என தெரிகிறது. 

More Stories

Trending News