வந்தியத்தேவனாக ஜெயம் ரவிக்கு வாழ்த்துக்கள் சொன்ன கார்த்தி!
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜெயம் ரவி நடித்து முடித்து விட்டதாக கூறியதை வந்தியத்தேவன் ஸ்டைலில் பதில் கூறினார் நடிகர் கார்த்தி.
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன் (Ponniyin selvan). இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இப்படத்தில் கார்த்தி (karthi), ஜெயம்ரவி(jayam ravi), விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்,நடிகைகள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற இடத்தில் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி, வந்தியத் தேவன் - கார்த்தி நடிக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் அருள் மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜெயம்ரவி இரண்டு பாகங்களுக்கும் என்னுடைய பகுதியை நடித்து முடித்துவிட்டேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு வந்தியத்தேவன் ஸ்டைலில் பதிலளித்திருக்கிறார் கார்த்தி. "இளவரசே! நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன்" என்று பதிலளித்திருக்கிறார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி கார்த்தி மட்டுமின்றி இந்திய சினிமாவின் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe