பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் சர்தார்.  பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இப்படத்தை எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.  கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ராஷி கண்ணா, சன்கி பாண்டே, ரஜிஷா விஜயன், முனீஷ்காந்த், இளவரசு போன்ற பலர் நடித்துள்ளனர்.  மேலும் இந்த படத்தில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  தற்போது இந்த படத்தை படக்குழு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு, அதன்படி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரஜினிக்காக சிவகார்த்திகேயன் செய்யப்போகும் சம்பவம்..! - இந்த தடவையும் ஹிட்தானாம்!


ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் 'ஏகே61' படமும் தீபாவளி பண்டிகையின்போது வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கார்த்தி படமும் அதே தினத்தில் வெளியாகுகிறது.  இதேபோல கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடித்த 'பிகில்' படமும், கார்த்தி நடித்த 'கைதி' படமும் தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கார்த்தி இளம்வயது போலீஸ் அதிகாரி தோற்றத்திலும், வயது முதிர்ந்த தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.  மேலும் இதுவரை கார்த்தி நடிப்பில் வெளியான படங்களின் பொருட்செலவை விட இப்படத்திற்கு அதிகமாக பொருட்செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டும் படக்குழு கோடிக்கணக்கில் செலவு செய்து இருக்கிறது.  அசர்பைஜான் பாராளுமன்றத்தில் கார்த்தி மற்றும் சங்கி பாண்டே இடையே நடக்கும் சண்டைக்காட்சி அரசிடம் முறையாக அனுமதி பெற்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.  அசர்பைஜான்-ஜார்ஜியா படப்பிடிப்பிற்கு மட்டும் படக்குழு ரூ.4 கோடி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  மேலும் கார்த்தியின் நடிப்பில் விருமன், சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற  படங்கள் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR