நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த தம்பி படம் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அவர் தற்போது இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பொன்னியன் செல்வன் (Ponniyin Selvan) அவற்றில் ஒன்றாகும். தற்போது நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் வெளியீடு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. 


கார்த்தியின் (Karthi) அடுத்த படம் ரெமோ புகழ் பக்கியராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் ஆகும். கார்த்தி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தன்னா, நெப்போலியன், லால், ஹரிஷ் பேரடி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக வதந்திகள் வந்தன. 


ALSO READ: நடிகர் கார்த்தியின் சுல்தான் பட ட்ரைலர் எப்போது.. வெளியானது தகவல்..!!!


இப்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சுல்தான் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். தொற்றுநோய் (Pandemic) உள்ள போதிலும் ஏப்ரல் 2 ம் தேதி தான் படம் வெளியாகும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். எனினும், ரசிகர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசங்களை அணிந்தே திரையரங்குகளுக்கு வர வேண்டும் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார். 



அவர் தனது ட்வீட்டில், “ கோவிட் 19 தொற்று அதிகரித்து வருவதால், ஏப்ரல் 2 ஆம் தேதி சுல்தான் வெளியாகுமா என பல நண்பர்கள் கேட்கிறார்கள். இதுவரை அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் அதே தேதியில் வெளியிடுவதாகத்தான் உள்ளோம். ஆகையால், கோவிட் விதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசங்களை அணிந்து திரையரங்கில் சுல்தான் படத்தைக் காண காத்திருங்கள். # ஜெய்சுல்தான் " என்று அவர் எழுதியுள்ளார்.


ALSO READ: Karnan Teaser: சம்பவம் இருக்கு! நாளை கர்ணன் படத்தின் டீசர் வெளியீடு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR