பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்

பொன்னியன் செல்வன் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு காவிய படமாகும். மணி ரத்தினத்தின் இந்த படம் பற்றி பல நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2021, 01:13 PM IST
  • ஐஸ்வர்யா ராய் இப்போது தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
  • பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் எழுதி, இயக்குகிறார்.
  • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம் title=

புதுடெல்லி: உலக அழகி என்றால் நம் மனதில் முதலில் தோன்றுபவர் ஐஸ்வர்யா ராய் தான். அவருக்கு முன்னும் பின்னும் பலர் உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். எனினும், உலக அழகி என்றால் நம் கண் முன் வருவது ஐஸ்வர்யா ராயின் முகம்தான்.

ஐஸ்வர்யா இப்போது தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது. திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'பொன்னியன் செல்வன்' படத்தில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai) காணப்படுவார்.

சமீபத்தில், இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அருஷிமா வர்ஷ்னி, தனது சமூக ஊடக கணக்கில் ஐஸ்வர்யா ராயின் ஒரு படத்தை பகிர்ந்தார். இப்படத்தில், 'பொன்னியன் செல்வன்' (Ponniyin Selvan) படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் தனது காரில் இருப்பது தெரிகிறது. அவர் படத்தை பகிர்ந்தவுடனேயே அப்படம் வைரல் ஆகிவிட்டது.

அந்த புகைப்படத்தின் தலைப்பில் அவர், “படப்பிடிப்பில் என்னால் உங்கள் மீது படிந்த என் பார்வையை அகற்ற முடியவில்லை

@aishwaryaraibachchan_arb mam  #aftershoot #ponniyinselvan #movie #aishwaryarai #ramojifilmcity #delighted #beyourself #lovemywork @aishwaryaxx #aishwaryaraifans” என எழுதியிருந்தார்.

பொன்னியன் செல்வன் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு காவிய படமாகும். மணி ரத்தினத்தின் (Mani Ratnam) இந்த படம் பற்றி பல நாட்களாக பேசப்பட்டு வருகிறது. படமாக வருவதற்கு முன்னரே ‘பொன்னியின்செல்வன்’ ஒரு காவியமாக தமிழர்களின் மனதில் பதிந்து விட்டது. இப்போது இதை திரை அரங்குகளில் படமாக காணும் அனுபவத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

ALSO READ: #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் எழுதி, இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்சுக்கு கீழ், அல்லிராஜா சுபாகரன் மற்றும் மணி ரத்னம் இதை இணைந்து தயாரிக்கிறார்கள். இளங்கோ குமாரவேல் மற்றும் பி.ஜெயமோஹன் ஆகியோர் மணி ரத்னத்துடன் சேர்ந்து இப்படத்தை இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த வரலாற்று திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட அதே பெயரிலான நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: டிஜிட்டல் தளம் Amazon-ல் கலக்க களமிறங்குகிறது விஜய்யின் Master!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News