தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


தீபாவை தீர்த்து கட்டும் திட்டம்


அதாவது, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால் தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்து செல்கிறாள். 


மறுபக்கம் ரம்யா அருண் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு அழைத்து நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியா இப்போ அது ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான். 



வசமாக சிக்கி கொண்ட ஐஸ்வர்யா பண்ண முடியாது என்று மறுக்க முடியாமல் தவிக்கிறாள், இதையடுத்து ஐஸ்வர்யா முதல் பரிகாரத்தை முடித்ததும் அருண் சாமி அடுத்த பரிகாரத்தை சொல்லுங்க என்று சொல்கிறான். சாமியார் ஐஸ்வர்யாவை கையை காட்ட சொல்லி அக்கினி சட்டியை வைத்து அலற விடுகிறார். 


அதிர்ச்சி அடையும் ராஜேஸ்வரி


அடுத்ததாக ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றிருக்க திரும்பி வரும் போது போலீசுடன் வந்து இறங்க ரியா அதிர்ச்சி அடைகிறாள். கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் அவள் ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். 


மேலும் படிக்க | நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ்


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Indian 2 : இந்தியன் 2 படத்தில் கமல் கேரக்டரின் வயது என்ன? கேட்டா ஆடிப்பாேவீங்க..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ