Karthigai Deepam TV Serial Today Episode 414 Update in Tamil: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


ஐஸ்வர்யாவுக்கு போன் செய்யும் ராஜேஸ்வரி


அதாவது, கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல நீ மாட்டிக்க போற மா என்று சொல்ல அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு என்று சொல்லி போனை வைக்கிறாள். 



கார்த்திக் வீட்டிற்கு வந்து நியூஸ் எடிட்டர் வந்து உண்மையை சொல்லுவான் என்று காத்திருக்க நேரம் ஆகி கொண்டே போகிறது, நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிக்க போறேனு சொன்ன, இப்போ ஒருத்தனையும் காணவில்லை என்று வம்பிழுக்கிறாள் ராஜேஸ்வரி. யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு என்று கார்த்திக்கை எச்சரிக்கிறாள். 


மேலும் படிக்க | பிரேமலு புகழ் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கும் முதல் தமிழ் படம்!


சமாளித்து வெளியே வரும் கார்த்திக்


இதையடுத்து கார்த்திக் நியூஸ் எடிட்டர் கண்டிப்பா வருவாரு எனக்கு 5 மணி வரைக்கும் டைம் கொடுங்க என்று சொல்லி விட்டு நேராக ரவி வீட்டிற்கு கிளம்பி வர அவரது மனைவி அவர் காலையிலேயே கிளம்பிட்டாரே அண்ணா, இன்னும் வரலையா என்று கேட்க கார்த்திக் எதையும் சொல்லாமல் நான் பார்த்துக்கறேன் என்று சமாளித்து வெளியே வருகிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரவியை கண்டுபிடித்து கார்த்திக் எப்படி உண்மையை உடைக்க போகிறான் என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Manjummel Boys : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியானது தகவல்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ