Tamil Serial Karthigai Deepam Today (12.9.2024) Episode: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. நாள்தோறும் மெகாத் தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதி எபிசோட் அப்டேட் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், கார்த்திக், துங்கா மற்றும் தீபா என மூவரும் வேறுவேறு வண்டியில் ஒரே சிக்னலில் காத்திருக்கும் நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


ஒரே சிக்னலில் இருந்தாலும், மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஆளுக்கு ஒரு திசையாக கிளம்பி விடுகின்றனர். இதையடுத்து தீபாவை கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து விஷயத்தை சொல்ல  போலீஸ் கேஸ் என்று சொல்ல அந்த பெண்மணி எனக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது. நீங்களே கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி வருகிறாள். 


தீபாவுக்கு ஷக்தி என்ற அன்பான நர்ஸ் அறிமுகமாகிறார். ஊசி போட்டு கொள்ள அழும் குழந்தைக்கு பாசமாக பேசி ஊசி போட்டு விடுகிறாள். மைதிலி, மீனாட்சியுடன் இதே ஹாஸ்பிடலுக்கு வர அப்போது ஊசி போட வந்த ஷக்தி என்ற நர்ஸை ஒரு பொண்ணு மலை உச்சியில் இருந்து விழுந்து விட்டதாக சொல்லி கொண்டிருக்க மீனாட்சி பேரை கேட்க மைதிலி அதெல்லாம் நமக்கு எதுக்கு என தடுத்து விடுகிறாள். 


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல்: உயிருடன் இருக்கும் தீபா.. உண்மையை உடைத்த கீதா, கார்த்தி ஷாக்


பிறகு இவர்கள் கோவிலுக்கு வர மீனாட்சி அந்த பெண்ணுக்காக கடவுளிடம் வேண்டி கொண்டு பிரசாதத்தை எடுத்து கொண்டு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். நர்ஸிடம் அனுமதி கேட்டு அந்த பெண்ணுக்கு ( தீபா ) வைத்து விட icu-ல் நுழைய போகும் சமயத்தில் டாக்டர் அதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தி விடுகிறார். 


இன்னொரு பக்கம் துங்கா ஒரு ரெஸ்டாரெண்ட்ட் வந்து ரவுடிகளை வர வைத்து கீதா போட்டோவை காட்டி சல்லடை போட்டு தேட சொல்கிறான், கார்த்தியும் இதே ரெஸ்டாரெண்ட் வர அவனுக்கும் கார்த்திக்கும் ஒரு சிறிய மோதல் உருவாகிறது. இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். 


வரும் வழியில் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த பெண்ணின் கணவர் தீபாவின் தாலியை விற்க எடுத்து வந்தவன் கார்த்திக் மீது தவறுதலாக மோத தாலி கீழே விழ கார்த்திக் அதை பார்த்து அவனை மிரட்டி விசாரிக்க என் பொண்டாட்டிக்கு தான் தெரியும் என்று வீட்டிற்கு அழைத்து செல்கிறான். அடுத்து அந்த பெண்மணி கார்த்தியிடம் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த விஷயத்தை சொல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். 


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஒரே சிக்னலில் தீபா, கார்த்திக், தூங்கா! யார் யாரைப் பார்ப்பார்கள்? த்ரில்லிங் எபிசோட்! டோண்ட் மிஸ்!


மேலும் படிக்க - திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 10 பிரபலமான தமிழ் நடிகைகள் இவங்க தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ