போலிஸிடம் இருந்து தப்பிக்க மயங்கி விழுந்து நடிக்கும் ஐஸ்வர்யா! கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!
Karthigai Deepam Latest Episode: கைதாகும் கார்த்திக்.. தப்பிக்கும் ஐஸ்வர்யா, எதிர்பாராத ட்விஸ்டுகள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கின் காரில் போதை பொருள் வைக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் காரை சுற்றி வளைத்து சோதனையிடம் போதை பொருள் தடுப்பு துறையினர் காரில் இருந்து போதை பொருட்களை கைப்பற்ற கார்த்தியை விசாரணைக்கு அழைக்கின்றனர். கார்த்திக் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லியும் கேட்க மறுக்கின்றனர்.
மறுபக்கம் ஐஸ்வர்யாவை வேறொரு செல்லுக்கு மாற்ற முடிவெடுக்கும் போலீஸ் அவளை வண்டியில் ஏற்றி செல்கின்றனர். போலிஸிடம் இருந்து தப்பிக்க திட்டமிடும் ஐஸ்வர்யா மயங்கி விழுந்தது போல் நடிக்கிறாள். இதனால் அவளை பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அட்மிட் செய்கின்றனர்.
சந்தர்ப்பம் பார்த்து போலீசின் துப்பாக்கியை திருடும் ஐஸ்வர்யா அதை வைத்து போலீசின் பிடியில் இருந்து தப்பிக்கிறாள். இன்னொரு பக்கம் ஆசிரமத்தில் இருப்பவர்கள் வேனில் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கி வருகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ