தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, ஆசிரமத்தில் இருக்கும் நர்ஸ் தீபாவுக்கு தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்க்க இங்கே தூக்கத்தில் இருந்த கார்த்திக் திடீரென எழுந்து தீபாவுக்கு ஏதோ ஆபத்து என்பது போல் தோன்றுவதாக பீல் செய்ய கீதா தீபாவுக்கு எதுவும் ஆகாது என்று கூல் செய்கிறாள். 


மறுபக்கம் தீபாவுக்கு காய்ச்சல் குறையாத நிலையில் என்னென்னமோ செய்து பார்க்கின்றனர். ஆனாலும் காய்ச்சல் குறையாத காரணத்தால் ஷக்திக்கு தகவல் கொடுக்க அவளும் ட்ரீட்மெண்ட் கொடுக்க அப்போதும் குணமாகாத காரணத்தால் ஒரு டாக்டருக்கு போன் செய்கிறாள். 


மேலும் படிக்க | கீதா கிடைச்சிட்டா அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம்! பிளான் பண்ணும் துங்கா! கார்த்திகை தீபம் எபிசோட்


டாக்டரிடம் தனது உறவுக்கார பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி என்ன ட்ரீட்மென்ட் கொடுப்பது என்று விசாரிக்க அவர் சில வழிமுறைகளை சொல்ல அதையும் பின்பற்றி பார்க்க அப்போதும் எந்த பயனும் இல்லை என்று தெரிய வருகிறது. 


இதனால் டாக்டர் அந்த பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர சொல்ல ஷக்தி, துங்காவுக்கு பயந்து தயங்கினாலும் வேறு வழியில்லை என்பதால் தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல முடிவெடுக்கிறாள். 


அடுத்த நாள் காலையில் கார்த்திக்கு, தீபாவின் கண் எதிரே கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று திட்டமிடும் அபிராமி விஷயத்தை சொல்லாமல் எல்லாரையும் கோவிலுக்கு அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ