பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிற்குள் கால் பதிக்க உள்ளதாகவும், விஜய் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீர்த்தி சுரேஷ்:


தமிழில், ’இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ்-தெலுங்கு மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவரது தாய் மேனகா தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்துள்ளார்.  மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி ஆகியோருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு மவுசு உள்ளதோ, அதே போல 80 மற்றும் 90களில் மேனகாவிற்கும் மவுசு இருந்தது. தனது தாய் தந்தை மூலம் 5 வயதிலேயே  குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் தலைக்காட்டியவர் கீர்த்தி.


தேசிய விருது வென்ற நாயகி..!


கீர்த்தி சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) என்ற படத்தில் நடித்திருந்தார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சாவித்ரியையே கண் முன் நிறுத்தியதாக கீர்த்திக்கு பல வழிகளிலும் பாராட்டு குவிந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதுவே இவருக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. இது, கீர்த்தியின் திரை வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க | ஜிம் சூட்டிலும் போட்டோ ஷூட்..! தர்ஷா குப்தாவின் எல்லை மீறும் கவர்ச்சி..!


பாலிவுட்டிற்குள் கால் கால் பதிக்கும் கீர்த்தி:


தென் திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வரும் கீர்த்தி, தற்போது பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார். இவர் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானாலும் பாலிவுட் ரசிகர்களுக்கு பெரிதளவில் பரிச்சயமாக இல்லாத முகமாகவே இருந்து வந்தார் கீர்த்தி. இந்த நிலையை மாற்ற தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


‘தெறி’படத்தின் இந்தி ரீ-மேக்:


அட்லீ குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம், தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம், விரைவில் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நாயகன் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறிவருகின்றனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் விரைவில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வருடம் மே மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் முடிந்தவுடன் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தியின் அடுத்தடுத்த படங்கள்:


கீர்த்தி சமீபத்தி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘மாமன்னன்’ படத்தில் கம்யூனிஸ்டு கதாப்பாத்திரத்தி நடித்திருந்தார். அடுத்து இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்டு 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் இவர் தெலுங்கில் நடித்திருந்த ‘தசரா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்திலும் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 


கீர்த்திக்கு கல்யாணம்..?


நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இவர் ஒரு பெரிய தொழிலதிபரை டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. அப்படி எதுவும் இல்லை என இதுகுறித்து கீர்த்தியும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் விளக்கம் தெரிவித்து விட்டனர். கீர்த்தி “எனக்கு திருமணம் செய்து வைப்பதில் அப்படி என்ன உங்களுக்கு இவ்வளவு ஆர்வம்..?” என பத்திரிக்கையாளர்களை நோக்கி வெளிப்படையாகவே கேட்டு விட்டார். இவரது காதலர் யார் என்ற விவரம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. 


மேலும் படிக்க | ‘மாமன்னன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..? முழு விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ