மகேஷ் பாபுவை அறைந்த கீர்த்தி சுரேஷ்... தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

மகேஷ் பாபுவை தவறுதலாக கன்னத்தில் அடித்துவிட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்துவருகிறார். தமிழில் இவர் நடித்த சாணிக்காயிதம் வரும் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் அவர் நடித்திருக்கும் சர்காரு வாரி பாடா வருகிற 12ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் குறித்து பேசுகையில், “காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்துவிட்டது. தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்துவிட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார்.
இருந்தாலும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். இந்தப் படத்தில் கலாவதி என்ற வேடத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள படங்களில் நடித்திராத வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறேன்” என்றார்.
மேலும் படிக்க | தென்னிந்திய கலைஞர்களை இந்தி திரையுலகம் மதிக்காது - நடிகர் சிரஞ்சீவி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பரசுராம் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி, வெண்ணிலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR