விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் தேசிய விருது நடிகை!
`தளபதி 67` படத்தில் த்ரிஷா மற்றும் சமந்தா போன்ற நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் 'வாரிசு' படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். குடும்ப கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர். படத்தின் பணிகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வாரிசு படத்தை காட்டிலும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பது என்னவோ லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகப்போகும் 'தளபதி 67' படத்தை தான். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'மாஸ்டர்' படம் நல்ல வரேவேற்பை பெற்றிருந்தது, அதனைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் 'தளபதி 67' படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில் அடிக்கடி 'தளபதி 67' படம் பற்றிய சில தகவல்களும் வெளியாகிக்கொண்டே வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த படத்தில் விஜய் 50 வயது கேங்ஸ்டராக நடிப்பதாகவும், 6 வில்லன்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தென்னிந்திய திரையுலகின் பெரிய நடிகர்களான சஞ்சய் தத், அர்ஜுன், பிரித்விராஜ் போன்றவர்களின் பெயர்களும் அடிபட்டு இருக்கிறது. மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை சமந்தாவும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. அதனைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் விஜய்யுடன் நடிகை த்ரிஷா ஜோடி பெறுவதாக கூறப்பட்டுள்ளது, இதில் அவர் விஜய்க்கு மனைவியாக நடிக்கிறார்.
மேலும் படிக்க | ராஜா ராணி 2 சீரியலிலிருந்து அர்ச்சனா விலகியது ஏன்? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!
இந்நிலையில் 'தளபதி 67' படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்கவைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் விஜய்யுடன், கீர்த்தி ஜோடி சேரப்போகும் மூன்றாவது படம் இதுவாகும், இதற்கு முன்னர் விஜய்யுடன் இணைந்து 'பைரவா' மற்றும் 'சர்க்கார்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 'தளபதி 67' படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது, தற்போது படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | கோப்ரா - கடைசி நேரத்தில் கிடைத்த சர்ட்டிஃபிக்கேட்... படக்குழு நிம்மதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ