1000 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தது கேஜிஎஃப் 2
உலகளவில் கேஜிஎஃப் 2 படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.பான் இந்தியா படமாக வெளியான இப்படத்துக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது.
படத்தின் மேக்கிங், சண்டை காட்சிகள், பாடல்கள் என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி பக்கா பேக்கேஜாக ரசிகர்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
இரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கேஜிஎஃப் 3க்கு ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | நான் முத்தமிடுவதை என் மகள் விரும்பவில்லை - விவேக் ஓபராய்
இதற்கிடையே மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கேஜிஎஃப் தயாரிப்பாளர் சமீபத்தில் கூறியிருந்தார். இரண்டாம் பாகத்தின் தாக்கம் இன்னும் விலகாத சூழலில் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட்டும் உடனே வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. முன்னதாக இந்திய அளவில் தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்கள் உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்திருந்தன. தற்போது கேஜிஎஃப் 2 நான்காவது படமாக 1000 கோடி க்ளப்பில் இணைந்திருக்கிறது.
மேலும் படிக்க | AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்?
அதேபோல் ஹிந்தியிலும் கேஜிஎஃப் 2 சாதனை படைத்துள்ளது. ஹிந்தியில் அதிவேகமாக 350 கோடி ரூபாய் வசூலித்த தென்னிந்திய படம் என்ற சாதனையையும் கேஜிஎஃப் 2 படைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR