இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது கே.ஜி.எஃப்- 2.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் இந்தியா வெளியீடாக ரிலீஸ் ஆகி வசூல் மழை பொழிந்த இப்படத்தை இந்திய சினிமா உலகமே வியந்து பார்த்தது. வசூலில் பல சாதனைகளைப் படைத்த இப்படம் இதுவரை சுமார் 1200 கோடி ரூபாய் வரை வசூல் புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகத்துக்குத் தற்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


                                              


இந்நிலையில் இப்படம் தொடர்பாக சில சுவாரஸ்ய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு நடப்பாண்டு இறுதியிலேயே தொடங்கப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். பிரபாஸை வைத்து பிரசாந்த் நீல் இயக்கிவரும் சலார் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருவதால்தான் அதன் பிறகு கேஜிஎஃப்-3 தொடங்கவுள்ளது.


மேலும் படிக்க | ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!


                                     


 


அதேபோல இப்படத்தின் கதை எப்படி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இப்படம் மார்வெல் யுனிவெர்ஸ் வகை பாணியில் எடுக்கப்படவுள்ளதாம். ராக்கி பாய் எனும் கதாபாத்திரத்துடன் பிற படங்களில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கவுள்ளார்களாம்.


அதனால், ஸ்பைடர் மேன் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படங்களைப் போன்ற அமைப்பில் இது எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தயாரிப்பாளரின் இந்தத் தகவலால் ரசிகர்கள் மத்தியில் இதன் அடுத்த பாகத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் படிக்க | ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR