பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!
பீஸ்ட் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி சாதனை படைத்துள்ளது.
விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது. கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
மேலும் படிக்க | நான் அரசியல்வாதி அல்ல - பீஸ்ட் டிரெய்லரில் விஜய்
சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து விட, அங்கிருக்கும் மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. பீஸ்ட் ட்ரெய்லர் வெளியான சிறிது நேரத்திலேயே 15 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ட்ரைலரில் விஜய் மற்றும் செல்வராகவன் மட்டுமே முன்னிலை படுத்தப்பட்டு உள்ளனர். மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டது.
பீஸ்ட் படத்திற்கு போட்டியாக கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலருக்கு கேஜிஎப் படத்தின் இயக்குனர் ரியாக்ட் செய்துள்ளார். ட்விட்டரில் நெல்சனின் டிவீட்டில், "இதற்கு முன்பு இருந்ததை விட சிறப்பாக உள்ளது, ட்ரைலர் சூப்பராக இருக்கிறது, விஜய் சார் மாஸ்" என்று பதிவிட்டுள்ளார், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கேஜிஎப் 2 ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடிகர் யாஸ், பீஸ்ட் vs கேஜிஎப் என்று சொல்ல வேண்டாம், இரண்டு படங்களும் வெளியாகிறது என்று சொல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | பீஸ்ட் ட்ரைலர் வெளியாகும் Premium Large Format என்றால் என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR