நான் அரசியல்வாதி அல்ல - பீஸ்ட் டிரெய்லரில் விஜய்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் டிரெய்லர், வெளியான உடனே 1 ஒரு மில்லியன் ரியல்டைம் பார்வைகளை பெற்றுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2022, 06:44 PM IST
  • நடிகர் விஜயின் பீஸ்ட் டிரெய்லர் வெளியானது
  • நான் அரசியல்வாதி அல்ல என டிரெய்லரில் வசனம்
  • ரியல் டைமில் ஒரு மில்லியன் வியூஸ் பெற்று சாதனை
நான் அரசியல்வாதி அல்ல - பீஸ்ட் டிரெய்லரில் விஜய் title=

இளைய தளபதி நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லரை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக மாலை 6 மணிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டது.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் விற்பனை தொடங்கியது! எங்கு தெரியுமா?

நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் தங்களின் டிவிட்டர் சமூகவலைதள பக்கங்களில் பீஸ்ட் டிரெய்லரை பகிர்ந்தனர். ரியல் டைமில் சுமார் 1 மில்லியன் பார்வைகளை பெற்ற பீஸ்ட் டிரெய்லரில், எதிர்பார்த்து போலவே விஜய் மிரட்டியிருக்கிறார். வீர ராகவன் என்ற கேரக்டரில் வரும் விஜய், ரா ஏஜெண்டாக நடித்திருப்பதாக தெரிகிறது. 

டிரெய்லரைப் பார்க்கும்போது அவர் உளவுத்துறை அதிகாரியாக இருப்பது தெரிய வருகிறது. எனக்கு அரசியல் விளையாட்டு பிடிக்காது எனக் கூறும் விஜய், ‘ஏனென்றால் நான் அரசியல்வாதி அல்ல’ என ஆணித்தரமாக கூறுகிறார். நெல்சனின் பிளாக் காமெடி கான்செப்ட் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளது. அவர் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் கஞ்சா மற்றும் ஆள் கடத்தலை வைத்து எடுத்திருந்தார். அந்த இரு படங்களும் வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் ஹிட்டைக் கொடுத்தது. 

 

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் நடிகர் விஜய் மோதவுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜே ஹெக்டே நடித்திருக்கிறார். செல்வராகவன், ரெடின் கிங்ஸிலி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வராகவனின் கேரக்டர் மிகவும் சஸ்பென்ஸ்ஸாக வைக்கப்பட்டிருந்த நிலையில், டிரெய்லரை பார்க்கும்போது அரசு அதிகாரியாக இருப்பதுபோல் தெரிகிறது. 

மேலும் படிக்க | பீஸ்ட் ட்ரைலர் வெளியாகும் Premium Large Format என்றால் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News